search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை கொட்டினால் அபராதம்"

    • திருச்சியில் டீக்கடைகள், வீடு கட்டுவோர் கழிவுகளை வீதியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • கோவில் நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ளும் போது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்

    திருச்சி:

    திருச்சி மாநகர பகுதிகளில் மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கை மற்றும் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சியில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநகர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வியாபரம் செய்வது, சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட செயல்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    அதைத்தொடர்ந்து மாநகரில் செயல்படும் ஓட்டல்கள், டீ கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் வியாபாரிகள் வியாபாரம் ெசய்யும் போது அந்த கடைகளின் குப்பபைகளை முறையாக குப்பைத் தொட்டி வைத்து மாநகராட்சி குப்பை வாகனங்கள் வரும் பொழுது எடுத்து கொட்டவேண்டும்.

    அவ்வாறு செய்யாமல் குப்பைகளை கடைகளுக்கு முன்பாக வைத்திருத்தல், சாலைகளில் வீசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்சி மாநகர் பகுதியில் தற்போது தூய்மை பணிகள் நல்ல முறையில் நடந்து வருகிறது. இன்று காலையில் உய்கக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ளும் போது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

    குறிப்பாக வீடு கட்டும் கழிவுகள், டீ கடைகளில், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வரும் குப்பகைளை சாலையில் ஏதாவது ஒரு மூலையில் கூட்டி வைத்திருந்தாலோ, அல்லது கொட்டி வைத்திருந்தாலோ அதை அதிகாரிகள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டால் வியாபாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    வீடு கட்டும் கழிவுகளை சாலையோரம் பொது மக்களின் சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் கொட்டி வைத்தால் அதை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    ×