search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடமுழுக்கை நடத்த வலியுறுத்தல்"

    • பழனி மலைக்கோவிலில் வருகிற 27ம் தேதி குடமுழுக்குவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய த்துறை செய்து வருகிறது.
    • கருவறை, வேள்விச்சாலை மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சி களை தமிழ் மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் வருகிற 27ம் தேதி குடமுழுக்குவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய த்துறை செய்து வருகிறது.

    இந்நிலையில் தமிழ் கடவுளாக பக்தர்களால் வணங்கப்படும் முருகன் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழியி லும் குடமுழுக்கை நடத்த வேண்டும் என தெய்வ த்தமிழ் பேரவை சார்பில் வலியுறுத்தப்பட்டு ள்ளது.

    பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் மண்ட பத்தில் இந்த அமைப்பின் நிர்வாகிகளின் ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது. பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை வகித்தார். வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், பதிணென் சித்தர்பீடம், மூங்கிலடியார், சிம்மம், சத்தபாமா அம்மையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்கு மக்கள் முன்னனியைச் சேர்ந்த கண்ணன், வீரத்தமிழர் முன்னணியைச் சேர்ந்த முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின் தெய்வத்தமிழ் பேரவையின் ஒருங்கி ணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. கருவறை, வேள்விச்சாலை மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சி களை தமிழ் மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    பிராமணர் அல்லாத தமிழ் அர்ச்சகர்க ளையும் குடமுழுக்கில் ஈடுபடுத்தி தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 20ம் தேதி பழனியில் உண்ணா விரத போராட்டம் நடத்த உள்ளோம்.

    இது அறப்போராட்டமாக வும், ஆன்மீக நிகழ்வாகவும் நடைபெறும். ஆன்மீகச் சடங்குகள் நிறைந்த நிகழ்வாக இருக்கும். 2019ம் ஆண்டு தஞ்சாவூர் கோவில் குடமுழுக்கின் போது பல்வேறு அமைப்புகள் இணைந்து உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொட ர்ந்தோம். அப்போதைய அரசு தாமாக முன்வந்து தமிழ்பாதி, சமஸ்கிருதத்தில் பாதியாக குடமுழுக்கு நடத்துவோம் என அறிவித்தது. அந்த தீர்ப்பை செயல்படுத்தி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    தமிழ் மந்திர புத்தகங்களை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. எனவே பழனி கோவிலில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×