search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்தவ இயக்கம்"

    • இலங்கை எம்.பி. சுபந்திரன் உள்ளிட்ட 5 தலைவர் கள் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார்கள்
    • 23-ந்தேதி சமூக நல்லி ணக்க மாநாடு நடக்கிறது. இதற்கு விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்குகிறார்

    நாகர்கோவில் :

    அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் அரு மனை ஸ்டீபன் நேற்று நாகர் கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    அருமனை கிறிஸ்தவஇயக் கத்தின் சார்பில் இந்த ஆண்டு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா, 25-வது ஆண்டு விழாவாகும். இந்த விழா வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்கள் அருமனை கிறிஸ்துமஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது வரை எங்களது விழாவில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் இந்த ஆண்டு வருகிற 21 மற்றும் 22-ந் தேதி களில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். இதில் இலங்கை எம்.பி. சுபந்திரன் உள்ளிட்ட 5 தலைவர்கள் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார்கள். எனவே இந்த 2 நாள் விழா பேரின்ப பெருவிழாவாக நடைபெற உள்ளது. இதில் உலக பிரசித்தி பெற்ற போதகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    23-ந்தேதி சமூக நல்லிணக்க மாநாடு நடக்கிறது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்குகிறார். இதில் மதசார் பற்ற அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து அழைப்பு விடுத்தோம். அவர் சார்பில் அமைச்சர் கலந்து கொள்வார் என கூறியுள்ளார்.

    இந்த மாநாட்டையொட்டி அன்று மாலை 6 மணிக்கு நெடியசாலை சந்திப்பில் இருந்து சமூக நல்லிணக்க வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது இதில் 900 கலைஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு சமூக நல்லிணக்க மாநாடு தொடங்கும். இந்த 3 நாள் நிகழ்ச்சிக்கான அனுமதி வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து அனுமதி கேட்டோம். வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி நடத்துமாறு கூறியுள்ளார். மாநாட்டுக்கு வரும் தலைவர்களுக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அரு மனை கிறிஸ்தவ இயக்க அமைப்பாளர் அல்காலித், தலைவர் டென்னிஸ், சட்ட ஆலோசகர் பிலிப்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயன் மற்றும் சுஜன்சிங், புஷ்பராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×