search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமப்புற தலைவர்"

    • ராகுல் காந்தியிடம் ஊராட்சி தலைவர்கள் வேதனை
    • மக்கள் தொகையில் 60 சதவீதம் மக்கள் கிராமப்புறத்தில் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாதயாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கினார். குமரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் செய்த அவர், தனது பயணத்தின் போது பல்வேறு அமைப்பினரை சந்தித்து வருகிறார். தமிழ்நாட்டில் வித்தியாசமான செயல்கள் செய்த 12 ஊராட்சி மன்ற தலைவர்களையும் அவர் சந்தித்தார். அவர்கள், ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசு கிராமப்புற தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்க மாட்டார்கள்.

    உள்ளாட்சி அமைப்பு களில் போதிய நிதி ஆதாரமும் தேவையான ஊழியர்களும் இல்லை. கேரளா போல உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுலிடம் தெரிவித்தனர்.

    இதனை உன்னிப்பாக கேட்ட ராகுல் காந்தி கேள்வி கேட்கும் உரிமை உள்ளவனால் மட்டுமே அதிகாரத்தை பெற முடியும் நீங்கள் கேள்வி கேட்க பயந்தால் நல்ல ஊராட்சி தலைவராக இருக்க முடியாது என கூறியதாக ஊராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    மக்கள் தொகையில் 60 சதவீதம் மக்கள் கிராமப்புற த்தில் உள்ளனர். 97 சதவீதம் நிலம் உள்ளாட்சி பகுதிகளில் உள்ளது. அதனால் ஊராட்சி பகுதிகள் மேம்பட வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர்.

    ×