search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராண்மா"

    ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ள கிராண்மா படத்தின் முன்னோட்டம்.
    ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு 'கிராண்மா' என்கிற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். பிரதான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.

    மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரையுலகின் பிரபலங்கள் சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா, சூர்யா ஜே.மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா, மரினா மைக்கேல், கோகுல் சுரேஷ், சரத் அப்பானி, ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

    கிராண்மா

    படத்தின் ஆடியோ, டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. 'கிராண்மா' கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட  சோனியா அகர்வால், சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். படத்திற்கு ஒளிப்பதிவு - யஸ்வந்த் பாலாஜி .கே, எடிட்டிங் - அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை - அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம், சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது.
    ×