search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி உபரி நீர்"

    • டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று தருமபுரிக்கு வருகை தந்தார்.
    • உபரி நீர் திட்டத்திதை தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது.

    தருமபுரி,  

    தருமபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பாப்பி–ரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று தருமபுரிக்கு வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    தமிழகத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஆங்காங்கே பா.ம.க. சார்பில் நடத்தி வருகின் றோம். முதற் கட்டமாக தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் கடத்தூரிலும், மாலை 4 மணிக்கு தருமபுரியிலும் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீர் திட்டம் நிறைவேற்ற முதல் கோரிக்கையாக தொடர்ந்து நாங்கள் வைத்து வருகின்றோம். இந்த உபரி நீர் திட்டத்தால், சிப்காட், தொழிற்பேட்டை, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதுசம்பந்தமாக மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் பல போராட்டங் களும், பலமுறை கையெ–ழுத்து இயக்கம் போராட்ட–மும் நடைபெற்றது. இதில் 10 லட்சம் பேர் கையெ–ழுத்து போட்டுள்ளனர். அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும் நாங்கள் கோரிக்கையாக வைத்தி ருந்தோம். அப்போது, அவர் இந்த உபரி நீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார்.

    பின்னர் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினி டமும் பலமுறை இதுகுறித்து மனுவாக நேரில் சந்தித்து கொடுத்துள்ளோம். இந்த திட்டத்தை குறித்து தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. வருடந்தோறும் காவிரி ஆற்றில் 100 டி.எம்.சி. உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்த நீரில் இருந்து 3 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் உபரிநீராக ஏரி, குளங்களில் நிரப்ப கோரிக்கை வைக்கப்–பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடமும் வலியுறுத்தி உள்ளோம்.

    அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. மனம் இருந்தால், மார்க்கம் அமையும் என்பதுபோல், தி.மு.க. ஆட்சி மனம் இறங்கினால், தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி ஆற்றின் உபரி நீர் திட்டம் நிறைவேறும். மாவட்டத்தில் தொழிற்பேட்டை இல்லாத–தால், இங்கிருந்து 5 லட்சம் இளைஞர்கள் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு சென்று வேலை தேடிவரு கின்றனர். எனவே, உபரிநீர் திட்டம் நிறைவேற்றி, தொழிற்பேட்டை அமைத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும். எனவே, காவிரி உபரி நீர்த்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி நீர் பங்கீட்டில் மத்திய அரசின் நதி நீர் ஆணையத்தையும் மதிக்கா–மல், நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் கர்நாடகா அரசு கடுமையாக நடந்து கொள்கி–றது. இது வருந்தத்தக்க விஷயமாகும். பிறகு நீதிமன்றம் எதற்கு? தீர்ப்பு எதற்கு? எதையும் கர்நாடகா அரசு மதிக்கவில்லை. தருமபுரி மாவட்டத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இல்லை. மாவட்டத்தில் உள்ள தொழில்துறையிலும் வளர்ச்சி இல்லை. தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள பெங்களூரு வளர்ச்சி அடைகிறது. இதேபோன்று சேலம் மாவட்டம் வளர்ச்சியடைகிறது. ஏன் தருமபுரி மாவட்டம் மட்டும் வளர்ச்சி அடையவில்லை. இந்த மாவட்டத்தின் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லையா? மாவட்டத்தில் விளையும் விவாசாய பொருட்களுக்கு இடைத்தரகர்கள் தான் விலையை நிர்ணயம் செய்து வருகிறார்கள். பருத்தி, மஞ்சள், மரவள்ளி, நெல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.

    2 மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.200 ஆக உயர்ந்தது. இதே தக்காளி 3 மாதங்களுக்கு முன்பே ரூ.5-யாக இருந்தது. இதில் இடைதரகர்கள் தான் அதிகமாக சம்பாதித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தக்காளியின் விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே, தமிழக அரசு குளிர்பதன கிடங்கு அமைத்தால், தக்காளி விலையேற்றத்திற்கான பிரச்சினைக்கு தீர்வு காணலாம். தருமபுரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை யால் அதிகமான மாண வர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் போதை தடுப்பு போலீஸ் துறையில் குறைந்த அளவே போலீசார் உள்ளனர். எனவே, காலியாக உள்ள காவலர் பணியிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலா ளர்கள் எஸ்.பி.வெங்கடேஸ் வரன் எம்.எல்.ஏ., அரசாங்கம், மாநில விவசாய அணி வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    ×