search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர்கள்"

    • ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
    • உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.

    தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மனோகர், சஞ்சீவ்குமார், சீர்காழி லாமேக், இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சிங்காரவேலன், மணிமாறன், புயல் பாலச்சந்திரன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விஜய் லூர்து பிரவீன்,மற்றும் போலீசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர்.

    தொடர்ந்து உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார், ஊர் காவல் படை தளபதி அலெக்ஸ்,ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திடீர் மரணமடைந்த ராஜபாளையம் போலீசார் குடும்பத்துக்கு நிதி உதவியை டி.எஸ்.பி. பிரீத்தி வழங்கினார்.
    • 1993-ம் ஆண்டு பேஜ் காவலர்களின் காக்கும் கரங்கள் சார்பாக வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    1993-ம் ஆண்டு பேஜ் காவலர்களின் காக்கும் கரங்கள் சார்பாக உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை மரணமடைந்த ராஜபாளையம் தெற்கு காவல்நிவையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நாகராஜ் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தை சேர்ந்த இவ ரது மனைவி ஆண்டாள் (வயது49), ஜெயப்பிரகாஷ் (22), அபிநேஸ் (14) என்ற 2 மகன்களும் உள்ளனர். அவரது குடும்பத்திற்கு உதவிடும் வகையில் 1993 பேஜ் காவல்துறையினர் சார்பில் அனைவரும் சேர்ந்து ரூ.7லட்சத்து 4 ஆயிரத்து 500 பணத்தை திரட்டினர். இதில் அவரது தாயாருக்கு ரூ.1 லட்சமும், மீதி தொகையை அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் ராஜபாளையம் டி.எஸ்.பி பிரீத்தி வழங்கி ஆறுதல் கூறினார். இதில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ராஜ், மனோகரன், வடக்கு காவல் நிலையம் முத்து கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், மணி கண்டன் சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவலர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    ×