என் மலர்
நீங்கள் தேடியது "Cleanliness Staff"
- இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார்.
- இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மத்தியபிரதேச மாநிலத்தில் காவலர்களின் வாகனங்களை முந்தி சென்றதற்காக தலித் தூய்மை பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார். அந்த புகாரில், "வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு செல்லும்போது போலீஸ் மற்றும் பணியாளர்களின் வாகனங்களை முந்தி சென்றேன். இதனையடுத்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக என்னை மிரட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது.
- வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.
முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், 2-ம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் ஆனி வருசாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமான மக்கள் சுவாமி தரினம் செய்தனர்.
இந்த விழாவில் ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜா, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது ஏராளமானோர் நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அவர்கள் அனைவருடனுமே நடிகை ரோஜா செல்பி எடுத்தார்.
இதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சிலர் செல்பி எடுக்க விரும்பினார்கள். ஆர்வமுடன் அவர்கள் ரோஜாவின் மிக அருகில் வந்து நெருங்கி நிற்க முயன்றனர். அப்போது ரோஜா திடீரென கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கைகாட்டினாராம். இதனால் சற்று தள்ளி நின்றபடியே தூய்மை பணியாளர்கள் நடிகை ரோஜா உடன் செல்பி எடுத்தனர்.
இந்நிலையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் நடிகை ரோஜா, தனது அருகில் நின்று செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்னதாக இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இப்படி செய்கிறார் ரோஜா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.
- சோழவந்தானில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
- இந்த முகாமில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் மதுரை மண்டல பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்டம் கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணம்மா வரவேற்றார். இப்பயிற்சியில் மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி செயலாளர் ஜீலான்பானு, சுகாதார பணி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் தூய்மை பணியாளர்கள் மேம்பாடு திட்டம் மற்றும் கணக்கெடுப்பு பற்றி பேசினார்கள்.
இந்த முகாமில் தூய்மை பணி குறித்தும், செயல்பாடு குறித்தும், கழிவு நீர் பராமரிப்பு, மலக்கசடு-கழிவுநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் சத்திய பிரகாஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி பணியாளர் பாலமுருகன் நன்றி கூறினார் இந்த முகாமில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.