என் மலர்

  நீங்கள் தேடியது "subramaniya swamy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை மறுநாள் (17-ந்தேதி) கொடி–யேற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது
  • 10-ம் திருவிழா 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை மறுநாள் (17-ந்தேதி) கொடி–யேற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது

  திருவிழாவை முன்னிட்டு 17-ந்தேதி (புதன்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

  காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம், தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30மணிக்கு உச்சி கால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

  குடைவரை வாயில் தீபாரதனை

  5-ம் திருவிழாவான 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். இரவு 7.30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது.

  7-ம்திருவிழா 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை நடக்கிறது.

  8.45மணிக்கு வெற்றிவேர் சப்ரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம்,மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

  பச்சை சாத்தி

  8-ம் திருவிழா 24-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது

  தேரோட்டம்

  10-ம் திருவிழா 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

  28-ந்தேதி (ஞாயிற்றுக்கி–ழமை) 12-ம் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  ×