போலீஸ் வாகனத்தை முந்தி சென்ற தலித் தூய்மை பணியாளரை தாக்கிய காவலர்கள்

இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார்.இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
போலீஸ் வாகனத்தை முந்தி சென்ற தலித் தூய்மை பணியாளரை தாக்கிய காவலர்கள்
Published on

மத்தியபிரதேச மாநிலத்தில் காவலர்களின் வாகனங்களை முந்தி சென்றதற்காக தலித் தூய்மை பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார். அந்த புகாரில், "வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு செல்லும்போது போலீஸ் மற்றும் பணியாளர்களின் வாகனங்களை முந்தி சென்றேன். இதனையடுத்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக என்னை மிரட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com