சோழவந்தானில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

சோழவந்தானில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.இந்த முகாமில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தானில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் மதுரை மண்டல பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்டம் கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணம்மா வரவேற்றார். இப்பயிற்சியில் மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி செயலாளர் ஜீலான்பானு, சுகாதார பணி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் தூய்மை பணியாளர்கள் மேம்பாடு திட்டம் மற்றும் கணக்கெடுப்பு பற்றி பேசினார்கள்.

இந்த முகாமில் தூய்மை பணி குறித்தும், செயல்பாடு குறித்தும், கழிவு நீர் பராமரிப்பு, மலக்கசடு-கழிவுநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் சத்திய பிரகாஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி பணியாளர் பாலமுருகன் நன்றி கூறினார் இந்த முகாமில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com