search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடைகள் பலி"

    • விவசாய நிலத்தில் வேலை செய்து வரும் நபருக்கும் கிருஷ்ணன் தம்பதியினருக்கும் சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • முதலில் வந்து தண்ணீர் குடித்த 5 ஆடுகள் 1 மாடு உள்ளிட்டவை தண்ணீர் குடித்த உடன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தன.

    தொப்பூர்,

    தருமபுரி-சேலம் மாவட்ட எல்லை பகுதியான தொப்பூர் அருகே உள்ள செக்காரப்பட்டி கிராமத்தை நேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது கோமதி.

    இவர்கள் வாழ்வாதார மாக தங்களுடைய விவசாய நிலத்தில் பூக்கள் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடுகள் வைத்து மேய்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து வரும் நபருக்கும் கிருஷ்ணன் தம்பதியினருக்கும் சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அதனை பெரிது படுத்தாமல் வழக்கம் போல நேற்று ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற பின்னர் தண்ணீர் குடிப்பதற்கு கால்நடைகள் அனைத்தும் வந்துள்ளது.

    அவற்றில் முதலில் வந்து தண்ணீர் குடித்த 5 ஆடுகள் 1 மாடு உள்ளிட்டவை தண்ணீர் குடித்த உடன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    வீட்டின் அருகிலேயே இருக்கின்ற தண்ணீர் தொட்டி களில் விஷம் கலக்கப்பட்டு ஆடுகள், மாடு உயிரிழந்தது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    ×