search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடைகள் இறப்பு"

    • தொடர் மழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
    • மழை நீர் வெளியேற்றும் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து வந்ததால் கடலூர் சிதம்பரம் பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கியது.

    கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு நேரில் வருகை தந்து மழைநீர் சூழ்ந்த விளைநிலங்களையும் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து புகைப்பட கண்காட்சியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

    இந்த நிலையில் நேற்று பெய்த கன மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் 96 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தும், 26 கால்நடைகள் மழை காரணமாக இறந்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து மழை நீர் வெளியேற்றும் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-

    கலெக்டர் அலுவலகம் - 42.8, குப்பநத்தம் - 39.6,வேப்பூர் - 37.0, விருத்தாசலம் - 30.0, மீ-மாத்தூர் - 26.0,கடலூர் - 24.2, சிதம்பரம் - 24.0, வானமாதேவி - 20.6,காட்டுமயிலூர் - 20.0, சேத்தியாதோப்பு - 19.8, பண்ருட்டி - 18.0, வடக்குத்து - 15.0, குடிதாங்கி - 14.0, ஸ்ரீமுஷ்ணம் - 11.2, பெல்லாந்துறை - 10.6, கே.எம்.கோயில் - 9.0, அண்ணாமலைநகர் - 8.4, புவனகிரி - 8.0, லால்பேட்டை - 8.0, லக்கூர் - 7.2, குறிஞ்சிப்பாடி - 7.0, தொழுதூர் - 5.0, கீழ்செருவாய் - 5.0, கொத்தவாச்சேரி - 2.0, மொத்தம் - 412.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • 12 கால்நடைகள் இறந்த நிலையில், 8 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வந்தது. நேற்று கடலூர் மாவ ட்டத்தில் அண்ணாமலை நகர், சிதம்பரம், பரங்கி ப்பேட்டை, வடக்குத்து, கொத்வாச்சேரி, புவனகிரி காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கன மழை பெய்த காரணத்தினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக 12 கால்நடைகள் இறந்த நிலையில், 8 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன.

    இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஏரிகள் நிரம்பி வந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரையும், வீடுகள் பகுதிகளில் சொந்த மழை நீரையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-அண்ணாமலைநகர் - 32.0, சிதம்பரம் - 28.8, பரங்கிப்பேட்டை - 28.0, மீ-மாத்தூர் - 2.0, வடகுத்து - 1.0, கொத்தவாச்சேரி - 1.0, புவனகிரி - 1.0, காட்டுமன்னார்கோயில் - 1.0, லால்பேட்டை - 1.0, மொத்தம் - 95.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    ×