search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை மருத்துவம்"

    • மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
    • மதுரை-நித்யா 2-வது இடத்தையும், மதுரை-தாமரை செல்வி மற்றும் பெரம்பலூர்-சிவா, ஆகியோர் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழகத்தில் இளநிலை கால்நடை பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில் நுட்ப பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்கை நடந்து வருகிறது.

    22 ஆயிரத்து 535 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். தகுதி பெற்ற விண்ணப்ப தாரர்களின் தரவரிசை பட்டியல் இன்று இணைய தளத்தின் வழியாக வெளியிடப்பட்டது.

    31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்று உள்ளனர். அதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ராகுல்காந்த், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கனிமொழி, தென்காசி-முத்துலட்சுமி, அரியலூர்-நந்தினி, திருப்பத்தூர்-கிரேஸ் கிரிஷ்டி, தர்மபுரி-விஷ்வா, அரியலூர்-வசந்தி, அரியலூர்-சக்திகுமரன் நாமக்கல் -லோபாஷினி, கரூர்-கவுசிகா ஆகிய 10 மாணவ-மாணவிகள் தர வரிசை பட்டியலில் முதல் இடங்களை பிடித்துள்ளனர்.

    இளநிலை தொழில் நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (பி.டெக்) தரவரிசை பட்டியலில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணுபிரசாத் 200-க்கு 199.50 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், திருவண்ணாமலை மாணவி தர்ஷா (198.50) 2-வது இடத்தையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வர்ண ஓவியா (198) மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ்குமார் (198) 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    அரசு பள்ளயில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பிரிவில் சேலம்-விக்னேஷ், பெரம்பலூர்-அஜய் ஆகியோர், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தனர். திருவண்ணாமலை-பானுபிரியா, மதுரை-நித்யா 2-வது இடத்தையும், மதுரை-தாமரை செல்வி மற்றும் பெரம்பலூர்-சிவா, ஆகியோர் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்காலிக தரவரிசை பட்டியல் பற்றி ஏதேனும் விசாரணை இருப்பின் 044-29994348, 29994349 ஆகிய எண்களில் மாணவர்கள் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • உடன்குடி அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • உதவி மருத்துவர் சத்யா கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள சீர்காட்சி ஊராட்சி வீரவாகுபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உடன்குடி ஒன்றிய குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கி முகாமை தொடங்கிவைத்தார். கால்நடை பராமரிப்பு துறை திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் மரு. செல்வகுமார் சிறப்புரையாற்றி சிறந்த கன்று மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிக்கு விருது வழங்கினார். உடன்குடி கால்நடை உதவி மருத்துவர் சத்யா கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், கருவூட்டல், மடி நோய்க்கு சிகிச்சை அளித்தார். இம்முகாமில் வெறிநாய் தடுப்பூசியும் போடப்பட்டது. கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. சுமார் 240-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. சீர்காட்சி பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் ஜெயகிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர் செல்வராஜ், கால்நடை பராமரிப்பு உதவியாளர் வசந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி தலைவர் பிடி.செல்லப்பன் தொடங்கி வைத்தார்
    • சிறந்த கால்நடை பராமரிப்பிற்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி:

    அயக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியாலா பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழாவிற்கு கால்நடை பராமரிப்புத்துறை தக்கலை கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் எட்வர்ட்தாமஸ் தலைமை தாங்கினார். மருத்துவ முகாமை அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவர் பிடி.செல்லப்பன் தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர்.எஸ்.எஸ் செந்தில் லேகா, டாக்டர் செய்யதுரிசால், கால்நடை ஆய்வாளர் ஜெரால்டு ஆல்வின்தாஸ், ஆகியோர் கலந்துக்கொண்டனர் முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிட்சை அளித்தல், செயற்கைமுறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை மலடு நீக்க சிகிச்சை அளித்தல், கோழிகளுக்கு தடுப்பூசி தாது உப்புக் கலவை வழங்குதல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறந்த கால்நடை பராமரிப்பிற்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் கவிதா, மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

    • பாலாஜிக்கு அரசு ஒதுக்கீட்டில் இளங்கலை கால்நடை மருத்துவப் பிரிவில் இடம் கிடைத்துள்ளது.
    • மாணவர் பாலாஜியை தாளாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    நாசரேத்:

    நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படி ப்பில் வேளாண்மைத் தொழிற் கல்வி பிரிவில் பயின்ற மாணவர் பாலாஜி. இவருக்கு சேலம் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் மதிப்பெண் தகுதி அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டில் இளங்கலை கால்நடை மருத்துவப் பிரிவில் இடம் கிடைத்துள்ளது. இதற்காக மாணவர் பாலாஜியையும், பயிற்றுவித்த வகுப்பு ஆசிரியர்கள் ஜெய்சன் சாமுவேல், ஜெய்சன் பாபு ஆகியோரையும், தாளாளர் எஸ்.சுதாகர், தலைமையாசிரியர் வி.ஜெபகரன் பிரேம்குமார் மற்றும் ஆட்சி மன்ற குழுத்தலைவர் மர்காஷிஸ் டேவிட்வெஸ்லி, ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், நாசரேத் நகர மக்கள் பாராட்டினர்.

    ×