search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்கோள் நாட்டுதல்"

    • நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கொடை விழா நடைபெறுவது வழக்கம்.
    • கொடை விழா வரும் செப்டம்பர் மாதம் 4-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் பால் பண்ணை சந்திப்பில் அமைந்துள்ள நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கொடை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டும் ஆவணி மாத கொடை விழா வரும் செப்டம்பர் மாதம் 4-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அதற்கான கால்கோள் நாட்டு விழா நிகழ்ச்சி நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத் துடன் ஆரம்பமான இந்த விழாவில் காலை 5 மணிக்கு கன்னியாகுமரி சென்று தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மகா அபிஷேக நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணிக்கு கால்கோள் நாட்டு நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், அவரது மனைவி மேகலா மகேஷ் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு நடை பெற்ற தீபாராதனை நிகழ்ச்சிக்கு பின் பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு ராஜ மேளத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் 6 மணிக்கு அலங்கார தீபாராதனை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் விழா நிறைவு பெற்றது. விழாவை யொட்டி ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வேலு மற்றும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    ×