search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பது"

    • பொதுவாக நூற்புழு தாக்கப்பட்ட பயிர்கள் சத்துப் பற்றாக்குறையால் தாக்கப்பட்ட போல் தோன்றும்.
    • செடிகளில் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப மேலாண்மை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நூற்புழுக்களின் தாக்குதலினால் பயிர்களின் விளைச்சல் குறைந்து விளை பொருள் தரமும் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டமேற்படுகிறது. பொதுவாக நூற்புழு தாக்கப்பட்ட பயிர்கள் சத்துப் பற்றாக்குறையால் தாக்கப்பட்ட போல் தோன்றும், செடிகளில் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப மேலாண்மை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

    பயிர்கள் குறைந்த வளர்ச்சி, குறைந்த எண்ணிக்கையிலான தூர்கள், பக்க கிளைகள், இடைகணுவின் நீளம் குறைதல், இலைகள் பச்சையம் இழந்து பழுப்பு நிறமாக மாறுதல், இலை ஓரங்கள் சிவப்பாகி மேற்புறமாக மடிதல், கிளைகள் ஒன்றுகூடி காலிபிளவர் போன்ற அமைப்பு உருவாகுதல், இலை நுனி வெண்மையாகி கீழ் நோக்கித் தொங்குதல், உருசிதைந்த மொக்குகள் அல்லது பூக்கள், ஆங்காங்கே திட்டுத் திட்டாக பயிர் வளர்ச்சி இன்றி காணப்படும், மண்ணில் ஈரமிருக்கும் போதும் வாடியது போல் காணப்படும், பயிர் உரிய காலத்திற்கு முன்பே முதிர்வு நிலையை அடைந்து விடும்.

    விதை நேர்த்தி: 1 கிலோ விதைக்கு வேப்ப எண்ணெய் 60இசி திரவ திரட்டு (சிட்ரிக் அமிலம் மூலம்) 2மிலி அல்லது சூடோமோனஸ் புளுரசன்ஸ் 10கிராம் , பேசிலோமைசிஸ் லிலாசினாஸ் 1 சதவீதம் நீரில் கரையும் தூள் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்தல்.

    மண்ணில் இடுதல்: சூடோமோனாஸ் புளுர சன்ஸ், பேசிலோமைசிஸ் லிலாசினாஸ் ஏதாவது ஒரு பூஞ்சான கொல்லி 2.5 கிலோ ,எக்டர் 50 கிலோ தொழு உரம், மரமொன்றுக்கு 20கிராம் ஏதாவது ஒரு பூஞ்சான கொல்லி பயன்படுத்தி பயன் பெறுதல்.

    மேலும் வேப்ப புண்ணாக்கு அல்லது ஆமணக்கு புண்ணாக்கு 2டன், எக்டர், கரும்பாலைக் கழிவு 15 டன் , எக்டருக்கு பசுந்தாள் உரங்களான சணப்பை, கொளஞ்சி பயிரிட்டு மடக்கி உழுதல். மேற்காணும் மேலாண்மை உத்திகளை கடைபிடித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×