search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்தி மண்டபம்"

    • வசூலிக்கும் உரிமை ரூ.11 லட்சத்துக்கு ஏலம்
    • பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சுற்றுலா வரும் பஸ், கார், வேன் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்காக கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரி கடற்கரைசாலை, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி ஆகிய இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த இடங்களில் பார்க்கிங் செய்யும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை சபரிமலை சீசன் காலங்களில் மட்டும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம்விடப்பட்டு வருகிறது. சீசன் இல்லாத மற்ற காலங்களில் இந்த இடத்தில் பார்க்கிங் செய்யும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை. இதேபோல கன்னியாகுமரி காந்தி மண்டபத்துக்கு செல்லும் மெயின் ரோட்டில் சுற்றுலா அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் பார்க்கிங் செய்யப்படும் சுற்றுலா வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் உரிமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் தனியாருக்கு ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது.

    இந்த பார்க்கிங் இடத்தில் வருடம் முழுவதும் பார்க்கிங் செய்யப்படும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு உள்ள முக்கோண பூங்காவை சுற்றிலும் ஏராளமான இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து இந்த இடத்தில் பார்க்கிங் செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. இதைத்தொடர்ந்து முதல் முறையாக கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு உள்ள முக்கோண பூங்காவை சுற்றி நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் உரிமையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கான ஏலம் விடும் நிகழ்ச்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் இந்த ஏலம் நடந்தது.

    இதில் கன்னியாகுமரி மாதவபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோண பூங்காவை சுற்றி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமையை ரூ.11லட்சத்து 11 ஆயிரத்து 111-க்கு ஏலம் எடுத்துள்ளார். இந்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமை 3 ஆண்டுகளுக்கு செல்லு படியாகும். ஒரு இரு சக்கர வாகனத்திற்கு ரூ.10 கட்டணம் நிர்ணயக்கப் பட்டுள்ளது.

    ×