search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் மாளிகையை முற்றுகை"

    • அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக தமிழக கவர்னர் ரவி செயல்பட்டு வருகிறார்.
    • கவர்னர் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக்கோரி தீர்மானம் கொண்டு வந்தார்.

    விழுப்புரம்::

    விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது              கடந்த பல மாதங்களாகவே தமிழக மக்களின் உணர்வுக்கு விரோதமாக, கூட்டாட்சித் தத்துவம், அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக தமிழக கவர்னர் ரவி செயல்பட்டு வருகிறார்.  நாட்டில் தமிழகத்தின் பாரம்பரியத்துக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்போல் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். நேற்று (திங்கட்கிழமை) காலை சட்ட சபையில் கவர்னர் உரையாற்றத் தொடங்கியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு, வெளிநடப்பு செய்தன. மாநில அரசு ஏற்கனவே வழங்கிய உரைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், பேரவையில் அதை முழுமையாக படிக்காமல், பல வார்த்தைகளைப் படிக்காமல் தவிர்த்திருக்கி றார். தமிழக கவர்னரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு, கூட்டாட்சித் தத்துவத்துக்கு, அவை மரபுக்கு எதிரானது. கவர்னரின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் சாசனத்தை மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் செயலாகும்    தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், அரசு அளித்ததை முழுமையாகப் படிக்காமல், கவர்னர் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக்கோரி தீர்மானம் கொண்டு வந்தார்  முதல்-அமைச்சரின் இந்த செயல் கூட்டாட்சித் தத்துவத்தை, பேரவையின் மாண்பைக் காக்கும் நடவடிக்கையாகும். இனி யும் ரவி தமிழக கவர்னராக நீடிக்கக்கூடாது. அவரது செயல்பாடுகளைக் கண்டித்து, வருகிற 20-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும். மத்திய அரசு அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும். மற்றக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மகத்தான போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம்.  மிழ்நாடு அல்லது தமிழகம் என அழைப்பதால் எந்த தவறும் இல்லை. ஆனால் தமிழ்நாடு என்ற சொல்லுக்கு கவர்னர் எடுத்துரைக்கும் அர்த்தம்தான் தவறானது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கிய போது ஏற்பட்ட சில விமர்சனங்களால்தான், அரசு இந்த ஆண்டு 6 அடி கொண்ட செங்கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கூறி, அரசாணை வெளியிட்டுள்ளது. எல்லா இடங்களிலும் 6 அடி நீளத்துக்கு கரும்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யும் போது 5 அடி 5½ அடி உயரம் கொண்ட கரும்புகளைக் கொள்முதல் செய்யுமாறு அரசிடம் எடுத்துரைத்து உள்ளோம்.

    தகுதி இல்லை

    ஊழலைப் பற்றி பேச தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்குத் தகுதி இல்லை. மேலும் தமிழக சட்டப்பேரவை அவை மாண்பை கேவலப்படுத்திய கவர்னரை கேட்க திரணியில்லாதவர்தான் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×