search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிப்பறைகளால் சுகாதார சீர்கேடு"

    • தார் சாலையை ஆண்கள் மற்றும் பெண்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
    • இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கரட்டுப்பட்டியில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் முருகன் கோவில் மலை அடிவாரத்தின் வழியாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலையை ஆண்கள் மற்றும் பெண்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை தவிர்த்து மாற்று பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதையடுத்து சுகாதார நிலையம் அருகே சாலையோரம் புதிய கழிப்பறைகள் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டது.

    ஆனால் இந்த கழிப்பறைகள் கட்டப்பட்டது முதல் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து தார்சாலையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து பயன்பாடு இல்லாமல் காணப்படுவதால் கழிப்பறைகளை சுற்றிலும் மரம், செடிகள் ஆக்கிரமித்து வருகிறது.

    இந்த நிலை நீடித்தால் கழிப்பறை கட்டிடம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு இடிந்து விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×