search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி அலுவலர் வாழ்த்து"

    • தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு தமிழக அணிக்கு கிருஷ்ணகிரி மாணவிகள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தேர்வான கிருஷ்ணகிர மாவட்ட பள்ளி மாணவிகள் 3 பேரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி:

    திருச்சி கொங்கு பொறியியல் கல்லூரியில் சப்-ஜூனியர் ஜூடோ சாம்பி யன்ஷிப் போட்டி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவி களும் பங்கேற்றனர்.

    இதில் இம்மிடிநாயக்க னப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா 57 கிலோ எடைப்பி ரிவில் தங்கப்பதக்கமும், இதே பள்ளியை சேர்ந்த மாணவி லோகபிரியா 28 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கமும் பெற்றனர். இதே போல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா 40 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி மாணவி நித்யா ஸ்ரீ 32 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி 36 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கமும், மாணவர் யுவராஜ் 35 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்க மும், கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரதீப் 55 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றனர்.

    மேலும், பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவி களையும், பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகளையும், கேரளாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகள் திவ்யா, லோகப்பிரியா, நித்யாஸ்ரீ ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நேரில் வரவழைத்து பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட கல்வி அலுவலர்கள் கோவிந்தன், மணிமேகலை, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், ராஜலட்சுமி, ஜூடோ மாஸ்டரும், உடற்கல்வி ஆசிரியருமான முருகன், ஜூடோ பயிற்றுனர் வினோத் ஆகியோர் உடனி ருந்தனர்.

    ×