search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி தாக்குதல்"

    குடியாத்தம் அரசு கல்லூரியில் காதலிக்க மறுத்த மாணவியை கல்லூரி வகுப்பறைக்குள் புகுந்து தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் மாதனூர் பகுதியை சேர்ந்த மாணவி பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாதனூர் முத்துமாரியம்மன் நகரை சேர்ந்த பிரசாத் (வயது 22). மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார்.

    தினமும் மாணவி பஸ்சில் வரும்போது பின்தொடர்ந்த வாலிபர் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த மாணவியிடம் தனது காதலை கூறியுள்ளார்.

    அதற்கு மாணவி மறுத்ததால் அங்கு வைத்தே மாணவியை தாக்கினார். இதுபற்றி மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அப்போது பிரசாத் மன்னிப்பு கேட்டார். அவரை மன்னித்து விட்டு விட்டனர்.

    ஆனாலும் பிரசாத் மாணவியை பின் தொடர்வதை நிறுத்தவில்லை. இன்று வழக்கம்போல மாணவி கல்லூரிக்கு புறப்பட்டு வந்தார்.

    மாணவி வந்த பஸ்சில் பிரசாத் பின்தொடர்ந்தார். குடியாத்தம் பஸ் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் சகமாணவிகளுடன் கல்லூரிக்கு சென்றார். காலை 8.45 மணிக்கு வகுப்பறையில் மாணவி அமர்ந்திருந்தார். மற்றொரு ஆட்டோவில் தொடர்ந்து வந்த பிரசாத் மாணவியை தேடி வகுப்பறைக்குள் சென்றார். ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என் காதலை ஏற்றுக்கொள் இல்லாவிட்டால் உனது போட்டோவை கிராபிக்ஸ் செய்து இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டினார்.

    இதனைக் கேட்டதும் மாணவிக்கு கோபம் வந்தது. அவர் பிரசாத்தை தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த பிரசாத் மாணவியின் முகம், தலை, கழுத்து பகுதிகளில் மாறி மாறி குத்தினார்.

    இதனைக் கண்ட மாணவிகள் அலறியடித்து ஓடினர். வாலிபர் பிரசாத்தை தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவரது தாக்குதலில் இருந்து மாணவியை மீட்க முடியவில்லை. மாணவியை தாக்கிய பிரசாத் அவரது செல்போனை பறித்து கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார்.

    தாக்குதலில் காயமடைந்த மாணவி செல்போனை கேட்டு பிரசாத் பின்னால் வந்தார். அப்போது கல்லூரி வளாகத்தில் மீண்டும் பிரசாத் தாக்கினார். இதனைக் கண்ட மாணவர்கள் பிரசாத்தை மடக்கி பிடித்தனர். காயமடைந்த மாணவியை குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பிரசாத்தை மாணவர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். போலீஸ் நிலையம் அருகே சென்ற போது சிறுநீர் கழித்து விட்டு வருவதாக பிரசாத் கூறினார். இதனை நம்பி அவரை விட்டனர். சுதாரித்துக் கொண்ட பிரசாத் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இந்த சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வகுப்பறைக்குள் புகுந்து மாணவியை தாக்கிய வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ, மாணவிகள் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் மாணவி உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.
    ×