search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி தேர்வு"

    மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தக்கோரி போராட்டம் நடத்திய நிலையில் உயர்கல்வித்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது.
    இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தது. இதனால் பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரிகளில் இறுதியாண்டின் கடைசி தேர்வு மட்டும் நடத்தப்பட்டது.

    2-வது அலை காரணமாக ஆன்-லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்-லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 1-ந்தேதியில் இருந்து ஒன்றாம் வகுப்புக்கான பள்ளிகளில் இருந்து அனைத்து வகுப்புக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    சில தினங்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகம், நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. தமிழகத்தின் மற்ற அனைத்து கல்லூரிகளிலும் இதே முறையில்தான் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் ஆன்-லைன் முறையில் செமஸ்டர் தேர்வை நடத்தக்கோரி போராட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என தமிழக உயர்கல்விதுறை செயலாளர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
    ×