search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்திட்டைகள் மற்றும் கற்சிற்பங்கள்"

    • ஆதி மனிதன் வாழ்ந்த குகைகள், புராதனக் கோயில்கள், கற் சிற்பங்களால் செதுக்க ப்பட்ட கடவுள்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • புதுப்புது சுற்றுலாத்தல ங்களை கண்டு ரசிக்கும் விதமாக சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி கொடைக்கானல் மிக முக்கிய சுற்றுலாத்தல ங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா ப்பயணிகள் 12 மைல் சுற்றளவில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரச் சோலைகள், தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் ஆகிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் ஆகிய இடங்களை மட்டுமே கண்டு ரசிக்கின்றனர்.

    பேத்துப்பாறை, அடுக்கம், வில்பட்டி கோவில்பட்டி, பூம்பாறை ஆகிய மலைக்கிராமங்களில் பண்டைய கால கலைச் சிற்பங்கள், நுழைவாயில் வளைவு, ஆதி மனிதன் வாழ்ந்த குகைகள், புராதனக் கோயில்கள், கற் சிற்பங்களால் செதுக்க ப்பட்ட கடவுள்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.

    அகழ்வாராய்ச்சி மூலம் தொல்லியல் துறையினர் அனைத்து கிராம பகுதிகளிலும் ஆய்வு செய்து வரலாற்று நினைவுகளை வெளிக்கொண்டுவரும் நிலையில் இருக்கும் கிராமப் பகுதிகளை புதிய சுற்றுலாத் தலங்களாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் புதுப்புது சுற்றுலாத்தல ங்களை கண்டு ரசிக்கும் விதமாக சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும்.

    மேலும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு புதிய சுற்றுலா இடங்களுக்கு பிரிந்து சென்றால் போக்குவரத்து நெரிசலும் குறையும். எனவே இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×