search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குட்டை"

    • தண்ணீரை உறிஞ்சி குடிநீருக்கு பயன்படுத்தவும் மழைக் காலங்களில் தண்ணீர் நிரப்பவும் குடிநீர் வாரியம் திட்டமிட்டது.
    • மழைக்காலம் தொடங்கினால் தண்ணீர் எடுக்கும் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    சென்னை:

    சென்னையை அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் 25 கல் குட்டைகளில் மழை நீர் பெருமளவு தேங்கி கிடக்கிறது.

    இந்த தண்ணீரை உறிஞ்சி குடிநீருக்கு பயன்படுத்தவும் மழைக் காலங்களில் தண்ணீர் நிரப்பவும் குடிநீர் வாரியம் திட்டமிட்டது.

    இதன்படி கல்குட்டை தண்ணீரை உறிஞ்சி செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து சென்னையில் குடிநீருக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த பணிகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. குவாரிகளில் மிதவை மோட்டாரை அமைத்து அங்கிருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

    தினசரி ஒரு கோடி லிட்டர் வீதம் கடந்த 3 நாட்களில் 3 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளது.

    தற்பேதைய கட்டமைப்பு மூலம் தினமும்3 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்ச வசதிகள் இருப்பதாகவும், ஆனால் ஒரு கோடி லிட்டர் மட்டுமே உறிஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்னும் ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் எடுக்கப்படும். இடையில் மழைக்காலம் தொடங்கினால் தண்ணீர் எடுக்கும் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    ×