search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருங்குளம்"

    • கருங்குளம் வட்டாரத்தில் உளுந்து மற்றும் பாசிபயறு 15000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • இலைப்புள்ளி நோயானது இலைகளில் சிறிய, சிறிய வட்டப்புள்ளிகளாக தோன்றும்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டாரத்தில் மானாவாரி பயிர்களான உளுந்து மற்றும் பாசிபயறு சுமார் 15000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதில் உளுந்து பயிரில் ஒரு சில கிராமங்களில் மஞ்சள் தேமல் நோய், துரு நோய், இலைபுள்ளி நோய் ஆகிய நோய்கள் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இந்நோய்களை கட்டுபடுத்தும் முறைகள் குறித்து கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மஞ்சள்தேமல் நோயின் அறிகுறியானது இளம் இலைகளின் ஆங்காங்கே மஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படும். பின்னர் இலை முழுவதும் திட்டுதிட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும் பச்சையும் கலந்த பகுதிகள் தோன்றும்.

    நோய்கள் அதிகரிக்கும் பட்சத்தில் இலைகள் மற்றும் காய்கள் முழுவதும் மஞ்சளாக மாறிவிடும். இந்நோயினை கட்டுப்படுத்த ஆரம்ப கால அறிகுறி தோன்றிய உடனே செடிகளை வேருடன் பிடுங்கி எரித்து விட வேண்டும். வயலில் ஹெக்டருக்கு 12 எண்ணம் என்ற வீதத்தில் வெள்ளை ஈக்களை மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை அமைத்து கண்காணிக்க வேண்டும்.

    ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1கிராம் போராக்ஸ் மற்றும் 10சதவீத நொச்சி இலைச்சாறு கலந்த கரைசலை தெளிக்க வேண்டும். வேம்பு சார்ந்த பூச்சி கொல்லியான அசாடிராக்டின் 300 பிபிஎம் லிட்டருக்கு 5 மி.லி. அல்லது எக்டருக்கு 50கிராம் தையோமீத்தாக்சம் 25மி.லி. அல்லது 50மி.லி. இமிடாக்குளோப்ரிட் 17.80 ஆகிய பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை கைதெளிப்பான், பேட்டரி கைதெளிப்பான் அல்லது தெளிப்பான மூலம் காலை,மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

    ஒன்றை இலைத்துரு நோயின் அறிகுறியானது இலைகளின் அடிப்பக்கத்திலும், மேல் பாகத்திலும் ஆரஞ்சு கலந்த துருப்புள்ளிகள் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் செம்பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடுவதால் காய்ப்பு மிகவும் குறைந்து விடுகிறது.

    மான்கோசப் ஏக்கருக்கு 800 கிராம் அல்லது புரோபிகோனசோல் ஏக்கருக்கு 200மி.லி. நனையும் அளவிற்கு கைதெளிப்பன் மூலம் கந்தகம் ஏக்கருக்கு 1000கிராம் இந்நோயினை கட்டுபடுத்த வேண்டும்.

    இலைப்புள்ளி நோயின் அறிகுறியானது இலைகளில் சிறிய, சிறிய வட்டப்புள்ளிகளாக தோன்றும். இப்புள்ளியானது சாம்பல் நிறமாக நடுவிலும் அதனைச் சுற்றி பழுப்பு நிற வளையத்துடனும் காணப்படும். நாளடைவில் இலைகள் காய்ந்து கருகி உதிர்ந்து விடும். கார்பன்டசிம் ஏக்கருக்கு 200கிராம் அல்லது புரோபிகோனசோல் ஏக்கருக்கு 200மி.லி. என்ற அளவில் கைதெளிப்பன் மூலம் தெளித்து இந்நோயினை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×