search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்"

    • 11-ந்தேதி நடக்கிறது
    • இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ .22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் மூலவராக வெங்கடாஜலபதியும் வலதுபுறம் ஸ்ரீதேவி தாயாரும் இடது புறம் ஸ்ரீ பூதேவி தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் .மேலும் மூலஸ்தானத்தின் வலதுபுறம் பத்மாவதி தாயார் சன்னதியும் இடதுபுறம் ஆண்டாள் சன்னதியும் அமைந்து உள்ளது.

    மூலவரின் எதிரே கருடாழ்வார் மற்றும் 40 அடி உயர கொடி மரமும் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27 -ந் தேதி மகாகும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 4-வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை இந்த ஆண்டு நட்சத்திர திதிபடி சப்தமி திதியான வருகிற 11-ந்தேதி நடத்த திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் ஆகம ஆலோசகர் அறிவுரை வழங்கி உள்ளார்.

    அதன்படி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிவில் 4-வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை வருகிற 11-ந்தேதி நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற 11-ந் தேதி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவையும் அதைத் தொடர்ந்து 9 மணிக்கு புண்ணியாக வாசனமும் அஸ்தோத்ரா பூஜையும் 10 மணிக்கு சத்தகலசாபிஷேக பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு சுவாமிக்கு திருமஞ்ச னம் சாத்துதலும் 11 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. பின்னர் ஹோமம், யாகம், அபிஷேகம் போன்றவைகளும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு பூர்ணாஹூதி பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    இந்த பூஜைகளை திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் அர்ச்ச கர்கள் தலைமையில் கன்னியாகுமரி ஸ்ரீவெங்க டேஸ்வர பெருமாள் கோவில் அர்ச்சகர்கள் நடத்து கிறார்கள். பின் னர் பக்தர்களுக்கு அருட்பிர சாதம் வழங்கு தல் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் ஏ.ஜே.சேகர் ரெட்டி, துணைத் தலைவர் ஆனந்தகுமார்ரெட்டி, அறங்காவலர் குழு உறுப் பினர் மோகன்ராவ், கன்னியாகுமரி ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி கோவில் ஆய்வாளர் ஹேமத ரெட்டி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    ×