search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்மாய் பராமரிப்பு"

    • திருப்பத்தூர் அருகே கண்மாய் பராமரிப்பு நிதிக்காக நடந்த மீன்பிடி திருவிழா நடந்தது.
    • கிடைத்த மீன்களை சமையல் செய்வதற்காக கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழசெவல்பட்டியில் புது கண்மாய் பராமரிப்பு பணிக்காக நிதி திரட்டுவ தற்கு ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப் படுவது வழக்கம். இந்த ஆண்டும் விவசாய தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் வற்றியது.

    இதனைத்தொடர்ந்து கிராமமக்கள் ஒற்றுமையாக மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். கண்மாய் மடை பராமரிப்பு மற்றும் இதர பராமரிப்புக்கு நிதி திரட்ட முடிவு செய்து ஊத்தா கூடை மூலம் முதலில் மீன் பிடிக்கவும், தொடர்ந்து கிராமமக்கள் மீன்பிடித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது.

    கீழ செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரிய வர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா கூடை, கச்சா, அரி, மீன்பிடி வலை உள்ளிட்ட உபகர ணங்களை கொண்டு ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்று மையாக கண்மாயில் மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத் தன. கிடைத்த மீன்களை சமையல் செய்வதற்காக கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றனர்.

    ×