search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் ஆம்புலன்ஸ் திட்டம்"

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்
    • மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமை யில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பு ரேவதி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மீனவர்க ளுக்கு வழங்கப் பட்ட உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். இணையம், அழிக்கால், கோவளம், மேல்மிடாலம் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதிகளில் சரியான முறையில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படவில்லை.

    கோவளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சில மீனவர்கள் உயிரிழந்து உள்ளனர். தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்போது அந்தப்பகுதி கிராம மக் களின் கருத்துக்கள் கேட்டு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். அந்த கிராமத்தில் ஒரு கமிட்டி அமைத்து பணியை தொடங்க வேண்டும்.

    கேரளாவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு 1000, 500 கிலோ எடை கொண்ட கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் வீடுகளுக்கு கட்ட பயன்படுத்தப்படும் ஜல்லிகளையும், மணல்களையும் போட்டு தூண்டில் வளைவு அமைக்கப்படுவதால் தூண்டில் வளைவுகள் உடனடியாக சேதம் அடைகிறது. இதை முறைப்படுத்த நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்கள் மற்றும் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க கடல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். சமீபத்தில் முட்டத்திலிருந்து 70 நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டபோது நடுக்கடலில் தவித்தனர்.

    அவர்களை மற்ற மீனவர்கள் சென்று மீட்டு உள்ளனர். இதற்கு 2 மணி நேரம் ஆனது. கடல் ஆம்புலன்ஸ் வசதி இருந்தால் அந்த பகுதிக்கு 10 நிமிடத்தில் சென்று மீட்பு பணியை மேற்கொண்டு இருக்க முடியும்.

    எனவே கடல் ஆம்பு லன்ஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழ மணக்குடியில் தனியார், தொண்டு நிறுவனங்கள் மூலமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப் பட்டுள் ளது.

    500-க்கு மேற்பட்ட வீடு களில் மக்கள் வசித்து வரும் நிலையில் அந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில், எல்லை தாண்டி மீன்பிடித்த தற்கான அபராத தொகை கடந்த 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது குமரி மாவட்டத்தை சேர்ந்த 66 படகுகள் தடையைமீறி மீன் பிடித்ததாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 பேர் மேல் முறையீடு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    தூண்டில் விளைவு அமைப்பது தொடர்பாக மீனவ மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 மீட்பு படகுகள் வாங்க நடவ டிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    ×