search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் சங்கங்கள்"

    • சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது.
    • இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய அளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14-ந் தேதி முதல் நவம்பர் 20-ந் தேதிவரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறை சார்பில் வருகிற 14-ந் தேதி முதல் நவம்பர் 20-ந் தேதி வரை 69-வது கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட உள்ளது.

    கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பயிர்க்கடன் மேளா நடத்தப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு 2022-23-ம் ஆண்டில் ரூ.200 கோடி அளவுக்கு பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளும், இதுவரை உறுப்பினராக சேராத விவசாயிகளும் உடனடியாக புதிய உறுப்பினராக சேர்ந்து பயிர் கடன் பெற்று பயனடையலாம். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டை சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வோளண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுசேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் பயிர்காப்பீடு கட்டணத்தை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

    மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கீழ்க்கண்டவாறு உர இருப்பு உள்ளது.

    யூரியா-840 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி.500 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ்-283 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ்-787 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது.

    எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

    கடன் உறுப்பினராக சேர தேவையான ஆவணங்கள்:-

    ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3

    கடன் பெற தேவையான ஆவணங்கள்:-

    1432 பசலி அடங்கல், 10(1) நகல் (பட்டா), ஆதார் அட்டை நகல், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கே.சி.சி. பாஸ்புக் நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×