search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழி"

    • கலெக்டர் அரவிந்த் பேச்சு
    • ஊடகப்போதையில் மாணவர்கள் தங்களது பொரும்பாலான காலத்தை வீணடித்து தங்களது உடல்நலம் , சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்றனர்.

    நாகர்கோவில்:

    சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2020-21-ம் நிதியாண்டில் போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின்கீழ் நாசா முக்த் பாரத் பிரசாரமானது இந்தியாவிலுள்ள 272 போதை பயன்பாடு அதிகமுள்ள மாவட்டங்க ளில் கொண்டுவரப்பட்டது.

    தமிழகத்தில் திருநெல்வேலி, தேனி, நாமக்கல் மற்றும் கன்னியா குமரி மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி மாவட்ட கலெக்டரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் ஒருப்ப குதியாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி களுக்கு போதைப்பொ ருள் பயன்பாட்டி னால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையுடன் இணைந்து தன்னர்வ அமைப்புகளோடு இணைந்து அக்டோபர் மதாம் 29-ந்தேதி 9 வகையான விழிப்புணர்வு போட்டிகள் மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரி யில் நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா புனித சிலுவைக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி, பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனத்தால் ஊடக போதை நோய் குறித்தான பயிற்சி பட்டறையினை பார்வையிட்டு பயிற்சி பெறும் முதன்மை தன்னார்வலர் உட்பட 250 பேர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், ஊடகப்போதையில் மாணவர்கள் தங்களது பொரும்பாலான காலத்தை வீணடித்து தங்களது உடல்நலம் , சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்றனர்.

    ஆசிரியர்கள் இந்த பயிற்சியினை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு மாணவர்களிடையே விழிப்பு ணர்வினை தீவிரப்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள் பயன் பாட்டினை முற்றிலுமாக நீக்குவதற்கு துணை புரிய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, ஜே.சி.எல், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், நாசா முக்த் பாரத் அபியான் முதன்மை தன்னார்வலர்கள், நெல்சன், அருள் ஜோதி, ஜெரோலின், அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×