search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்"

    • தென்னிந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் உள்ளது.
    • தற்போது மார்க்கெட் நவீன மயமாக்கும் ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    தென்னிந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்ச த்திரம் காய்கறி மார்க்கெட் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டன் சத்திரம் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் அதிகளவில் தாங்கள் விளைவித்த காய்கறி களை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விலை நிர்ணயம் செய்வார்கள்.

    இங்கிருந்து தினமும் சுமார் 1000 டன் காய்கறிகள் தமிழ்நாடு முழுவதும், கேரளா, ஆந்திரா கர்நாடகா, மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு தினமும் சுமார் 2 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும் பண்டிகை காலங்களில் ரூ.3 கோடி வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வர்த்தகம் நடைபெறும்.

    தற்போது பெருகி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப கட்டிடம் விரிவாக்கம் செய்வதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை அமைச்சர் கே. என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தீவிர முயற்சியால் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ரூ.29 கோடி செலவில் நவீன மயமாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் அதிநவீன வசதிகளுடன் வியாபாரிகளுக்கான கடைகள், உணவகம், போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வாகனங்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழி,வாகன நிறுத்துமிடம், வங்கி சேவை, ஏ.டி.எம். மையம், போலீஸ் உதவி மையம், குடிநீர் சேவை, கழிப்பறை வசதி, வெளியூரில் இருந்து வந்து செல்லும் விவசாயிகள் தங்கி செல்வதற்காக தங்கும் விடுதிகள், தடையில்லா மின்சார வசதி, அன்றாடம் மீதியிருக்கும் மார்க்கெட் குப்பைகளை நவீன எந்திரங்கள் வசதியுடன் தினமும் சுத்தம் செய்யும் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் தற்போது மார்க்கெட் நவீன மயமாக்கும் ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    ×