என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐடி பெண் ஊழியர்"
- பக்கத்து குளியல் அறையில் இருந்து யாரோ தான் குளிப்பதை வீடியோ எடுப்பதை அறிந்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.
- பின்னர் அவர் சத்தம் போட்டார். இதனையடுத்து வீடியோ எடுத்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
குனியமுத்தூர்:
கோவை வெள்ளலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இளம்பெண் தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து குளியல் அறையில் இருந்து யாரோ தான் குளிப்பதை வீடியோ எடுப்பதை அறிந்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் சத்தம் போட்டார். இதனையடுத்து வீடியோ எடுத்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் தங்களது மகளுடன் போத்தனூர் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் குளிப்பதை மறைந்து இருந்து வீடியோ எடுத்தது சேலத்தை சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 27) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி தனியார் கார் கம்பெனியில் டெக்னிசீயனாக வேலை பார்த்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் விக்னேஷ்குமாரை கைது செய்தனர்.
அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்து, அதில் பதிவாகி இருந்த இளம்பெண்ணின் ஆபாச வீடியோக்களை அழித்தனர்.