search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி வலியுறுத்தல்"

    கம்போடிய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை சர்வதேச சமுதாயம் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தி உள்ளது. #CambodiaElection #CambodiaOpposition
    புனோம் பென்:

    தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் பிரதமர் ஹூன் சென், தன் பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்த தீர்மானித்தார். இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்தது.  இதைத்தொடர்ந்து கம்போடியா பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

    கம்போடியா தேசிய மீட்பு கட்சி உள்பட பல்வேறு கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    33 ஆண்டுகாலம் பிரதமராக பதவி வகித்த ஹூன் சென் இந்த தேர்தலிலும் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார் என அவரது ஆதரவாளர்கள் திடமாக நம்புகின்றனர். 100-க்கும் அதிகமான தொகுதிகளில் ஆளுங்கட்சியான கம்போடிய மக்கள் கட்சி வெற்றி பெறும் என அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



    பிரதமரை எதிர்த்து தேர்தல் களத்தில் மிகச்சிறிய கட்சிகள் மட்டுமே காணப்படுவதாகவும், அவர்களுக்கும் பிரசாரத்துக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்றும், ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும் வாக்குப்பதிவில் தில்லுமுல்லு நடந்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில், இந்த தேர்தல் முடிவையும், கம்போடிய மக்கள் கட்சியின் வெற்றி பிரகடனத்தையும் சர்வதேச சமுதாயம் ஏற்கக் கூடாது என்றும், முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் எதிக்கட்சியான கம்போடிய தேசிய மீட்பு கட்சி வலியுறுத்தி உள்ளது.

    ‘ஜூலை 29, 2018 கம்போடிய ஜனநாயகம் மறைந்த நாள், சமீபத்திய வரலாற்றில் புதிய கருப்பு நாள்’ என்று அக்கட்சியின் துணை தலைவர் கூறியுள்ளார். #CambodiaElection #CambodiaOpposition
    ×