search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரக்கடைகளில்"

    • 8 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டரால் அமைத்த குழு நடவடிக்கை

    அரியலூர்

    மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்திட கலெக்டரால் குழு அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த குழு வட்டார வாரியாக உர விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின்போது விலை பட்டியல் வைக்காதது, உரம் விற்பனை இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை முனை எந்திரத்தில் இருப்பு போன்றவற்றை முறையாக பராமரிக்காமலும், கட்டண ரசீது இன்றி உர விற்பனை செய்தது போன்ற காரணங்களுக்காகவும் 8 உரக்கடைகளில் விற்பனைக்கு இந்த குழு தடை விதித்துள்ளது. மேலும் அந்த கடைகளில் விற்பனை முனை கருவி முடக்கம் செய்யப்பட்டுள்ளது.உரக்கடைகளில்

    உர இருப்பு மற்றும் புத்தக இருப்பை சரி செய்யாதது மற்றும் கடைகளை ஆய்வு தினத்தன்று மூடியது உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாக 9 உரக்கடைகளுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, பதுக்கினாலோ அல்லது மற்ற இடுபொருட்களை சேர்த்து வற்புறுத்தி விற்பனை செய்தாலோ, மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்."

    ×