search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சினி மாகாளி அம்மன் கோவில்"

    • கலெக்டரிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு
    • உச்சினி மாகாளி அம்மன் கோவில் ஆதிதிராவிட சமுதாயத்துக்குரியது

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வந்து கலெக்டர் அரவிந்திடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு குமாரபுரம் பகுதியில் ஆதிதிராவிட சமுதாயத்துக்குரிய உச்சினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, சுற்றுச்சுவரும் கட் டப்பட்டது. இந்த நிலையில் தனிநபர் ஒருவர் சுற்றுச்சுவர் அமைந்துள்ள பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதை என்றும் அதை அடைத்து விட்டதாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து கோவிலின் சுற்றுச்சுவரை இடிக்க உத்தரவிட்டு இருப்பதாக கூறி அவ்விடத்தை சம்பந் தப்பட்ட துறை அலுவலர்கள் போலீசார் துணையுடன் இடிக்க முற்பட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சுற்றுச்சுவரை இடிக்க கூடாது என தெரி வித்தார்கள். இதுபற்றி என்னிடமும் முறையிட்டனர்.எனவே கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்படாமல் மக்களின் விருப்பம் போல் அந்த பகுதியில் ரோலிங் கேட் அமைக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    அப்போது அவருடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து கோட்டாட்சியர், போலீஸ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    ×