search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் தாக்குதல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
    • லெபனான் தலைநகரில் இயங்கும் பாலஸ்தீன ஆயுதப்படையினர் இஸ்ரேல் மீது சரமாரியாக 34 ராக்கெட் குண்டுகளை வீசினர்.

    காசா:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீன நாட்டில் காசா முனை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் கருதுகிறது.

    சில பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த பகுதியில் இஸ்ரேலிய ஆயுத படை மற்றும் பாலஸ்தீன படைகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜெருசேலத்தில் உள்ள மசூதி ஒன்றில் முஸ்லீம்கள் தொழுகையின் போது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த லெபனான் தலைநகரில் இயங்கும் பாலஸ்தீன ஆயுதப்படையினர் இஸ்ரேல் மீது சரமாரியாக 34 ராக்கெட் குண்டுகளை வீசினர்.

    இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் உள்ள பாலஸ்தீன ஆயுதப்படைகள் மீது இன்று காலை வான்வெளி தாக்குதலை நடத்தியது. சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கியது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இந்த சண்டையில் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் நமது எதிரிகள் நம்மை குறைத்து மதிப்பிட வேண்டாம் என இஸ்ரேல் பிரதமர் வீடியோ மூலம் தெரிவித்து உள்ளார்.

    ×