search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளவயது திருமணம்"

    • தாய்ப்பாலில் உள்ள வெள்ளை அணுக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.
    • முறையான கர்ப்பகால பராமரிப்புடன் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், உலக தாய்ப்பால் வாரவிழாவை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா-2022 "தாய்ப்பால் அளிப்பதை உயர்த்துவோம் கற்பிப்போம் ஆதரிப்போம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவை யான ஊடடச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரி விகிதத்தில் அமைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

    குழந்தையின் சிறப்பான, ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடல் நலத்திற்காக பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதுகாப்பான கூடுதல் உணவு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு தாய்ப்பால் மற்றும் கூடுதல் உணவு முறையாக பெற்ற குழந்தைகள் மெலிவுத்தன்மை, எடைக்குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கி யமான குழந்தையாக வளருவார்கள்.

    குழந்தைகளின் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தாய்ப்பால் ஊட்டச்சத்தே அடித்தளமாகும். தாய்ப்பால் கொடுப்பதினால் கண் பார்வைக்கு தேவையான வைட்டமின்-ஏ சத்து கிடைக்கிறது. தாய்ப்பாலில் உள்ள வெள்ளை அணுக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.

    எனவே, முறையான கர்ப்பகால பராமரிப்புடன் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேப் போல் இளம் வயது திருமணம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    இளம் வயது திருமணத்தால் தாய்சேய் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. பெண்ணுக்கு 21 வயதிற்கு மேல் திருமணம் செய்வது மற்றும் தேவையான ஊட்டச்சத்து உட்கொள்வதால் தாய் ேசய் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) டாக்டர்.வெங்கடேசன், தாசில்தார் நீலமேகன், வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர். இனியால் மண்டோதரி, டாக்டர்.சுசித்ரா மற்றும் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டனர்.

    ×