search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச நோட்டு புத்தகங்கள்"

    • திண்டுக்கல்லில் தி.மு.க சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்

    திண்டுக்கல் :

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெரசாமேரி தனது வார்டுக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் எல்.கே.ஜி முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 200 மாணவ-மாணவிகளுக்கு பேனா, பென்சில், ரப்பர், நோட்டு, ஜாமின்ரிபாக்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு மேற்குபகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பெஞ்சமின் பிரிட்டோ ஏற்பாடு செய்திருந்தார்.

    மாநகராட்சி மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மேற்கு மண்டல தலைவர் பிலால்உசேன், கிழக்கு மண்டல தலைவர் ஜான்பீட்டர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், 41-வது வார்டு கவுன்சிலர் விமலா ஆரோக்கியமேரி, பொறுப்பாளர் கருப்பட்டி சேவியர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×