search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து சேவா சங்கம்"

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
    • ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஒரு மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய மாசிக் கொடை விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1936-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த மாநாட்டை ஹைந்தவ (இந்து) சேவா சங்கம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து நடத்தி வருகின்றன.

    இந்த ஆண்டு 86-வது மாநாடு மார்ச் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ைஹந்தவ சேவா சங்கம், மாநாட்டை நடத்தக் கூடாது என்றும், அரசு தான் நடத்த வேண்டும் என்றும், மாநாடு பந்தலுக்கு டெண்டர் கொடுத்து பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவில் ஸ்ரீகாரியம், ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது பக்தர்களுக்கும், சேவா சங்க உறுப்பினர்களுக்கும் வருத்தத்தையும் வேதனையையும் அளித்துள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் நல்லிணக்கத்தோடு அமைதியாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில், கடந்த 85 ஆண்டுகளாக நடந்தது போல இந்த ஆண்டும், இந்து சமய மாநாட்டை அதே இடத்தில்,ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×