search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்றில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்"

    • ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே வீசி செல்கின்றனர்.

    ஒகேனக்கல் ,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தளம் உள்ளது. இங்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளை ஆற்றிலும், பொது இடங்களிலும் வீசி செல்லும் அவல நிலை ஏற்பட்டு வந்தது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற நிலையை கொண்டு வந்தா.ர்

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் தலைமையில் மீண்டும் மஞ்சப்பை என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு ஒகேனக்கல்லில் உள்ள கடைகள் மற்றும் சிறு கடைகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்த அறிவுறுத்தலை அலட்சியப்படுத்திவிட்டு அருவிக்கு செல்லக்கூடிய நடைபாதையில் கடைகளை வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் சுயலாபத்திற்காக மக்களிடையே அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு பிளாஸ்டிக் பையை இனாமாக தருவதால் மக்களும் வாங்கி பயன்படுத்தி விட்டு பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே வீசி செல்கின்றனர்.

    இதனால் ஆற்றுப்பகுதி களிலும் , நீர்வீழ்ச்சி பகுதியி களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் மிதந்து கொண்டு இருக்கின்றன. அதேபோல் வனப் பகுதிகளில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை கால்நடைகள் உண்பதால் அவை இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பெருகிவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்குமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பு கின்றனர்.

    அதேபோல் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பயன்படுத்திவிட்டு குப்பைகளை போட சரியான குப்பைத்தொட்டி கூட இல்லை என்று சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக அலுவலர் குற்றம் சாட்டுகின்றனர்.

    ×