search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பேருந்து"

    • ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது
    • அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என அமைச்சர் பேட்டி

    சென்னை:

    தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஆம்னி பேருந்துகளின் அனைத்து சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால், ஆணையர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பண்டிகை காலங்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    பின்னா செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் என்றார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என்றும், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்கவில்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
    • சென்னையில் இருந்து நெல்லைக்கான டிக்கெட் 3500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார்

    சென்னை:

    இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால் வெளியூரில் இருப்பவர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது.

    இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ள பலர் முன்பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பஸ் கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,300 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×