search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமித்துள்ள கடைகள்"

    • பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிர மித்து வைத்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஏ.எம்.சி. சாலையில் நடைபாதையின் ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லின் மத்திய பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. இங்கு பல்வேறு ஊர்களுக்கு தினமும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தின் தலைநகராக திண்டுக்கல் உள்ளதால் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்க ணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    பஸ் நிலையம் எப்போதும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரைக்கும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிர மித்து வைத்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,

    திண்டுக்கல் பஸ் நிலையம் ஏற்கனவே நெருக்கடி சூழலில் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலை யில் ஏ.எம்.சி. சாலையில் உள்ள வியாபாரிகள் நடைபா தையை ஆக்கிரமித்து துணிக்கடை, செப்பல் கடை உள்ளிட்ட பல்வேறு கடை களை வைத்துள்ளனர். இந்த கடைகளுக்கு வரக்கூடிய பொதுமக்கள் வாகன ங்களை சாலையின் ஓரத்தி லே நிறுத்தி விடுகின்றனர்.

    இதனால் இந்த பகுதி முழுவதும் நெருக்கடியான சூழலில் சிக்கித் தவிக்கிறது. காலை, மாலை நேரங்களில் இந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் நடைபாதை ஆக்கிரப்பின் காரணமாக நடு ரோட்டில் நடந்து செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதனால் அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஏ.எம்.சி. சாலையில் நடைபாதையின் ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுத்தனர்.

    ×