search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு விரைவு போக்குவரத்து கழகம்"

    • காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
    • கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 150 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பஸ்களில் திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்களும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, விழுப்புரம் பகுதிகளுக்கு 40 சிறப்பு பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 150 பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டலம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலமாக தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சனிக்கிழமை (22-ந்தேதி), ஞாயிற்றுக்கிழமை (23-ந்தேதி) விடுமுறை தினங்கள் மற்றும் திங்கட்கிழமை (24-ந்தேதி) சுபமுகூர்த்த நாள் என்பதால் 21-ந்தேதி (இன்று) வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலமாக தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள இதுநாள் வரை 9 ஆயிரத்து 298 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். இருந்த போதிலும் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு, 21-ந்தேதி (இன்று) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன், கூடுதலாக 300 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 600 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 7 ஆயிரத்து 258 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×