search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்"

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட் ஆப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது இதில் வேலூர் மாவட்ட ஜூடோ அசோசியேசன் சார்பில் மனு ஒன்று அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது

    வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஜூடோ விளையாட்டில் மாணவ மாணவிகள் அனைத்து நிலை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர்.

    வேலூர் மாவட்ட ஜூடோ சங்கத்தின் மூலம் பள்ளி கல்லூரி சேர்ந்த 50 மாணவ மாணவியர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களில் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் போதிய அளவு பயிற்சி பெற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாடு காரணமாக ஜூடோ விளையாட்டில் பங்கு பெற முடியாத நிலை உள்ளது.

    அவர்களுக்கு அடுத்தடுத்த உயர்மட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று பதக்கம் பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் போட்டிகளில் கல்லூரிகளில் படிக்கும் ஜூடோ மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் பங்கு பெற செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    வேலூர் திருப்பத்தூர் மாவட்ட அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு அளித்தனர்.

    அதில் அன்லாக் நிலுவைத் தொகை செலுத்த கூறும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட் ஆப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை நிறுத்த வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

    ×