search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசமூடு"

    • இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது
    • கோவில் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே வெள்ளிவிளாகம் அரச மூடு அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் மற்றும் திருவிழா இன்று (8-ஆம் தேதி) தொடங்கி 10ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

    1-ம் நாள் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் 6 மணிக்கு நிர்மால்ய பூஜை, 8.15 மணிக்கு வருஷாபிஷேகம் மற்றும் கலச பூஜை, 10.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, அதனை தொடர்ந்து ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம அர்ச்சனை, மதியம் 12 மணிக்கு உச்ச பூஜை, சிறப்பு தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு அபிராமி அந்தாதி பாராயணம், 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 8.30 மணிக்கு சமய மாநாடு நடைபெறும்.

    2-ம் நாள் திருவிழாவான 9-ம் தேதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை அதனை தொடர்ந்து கீதா பாராயணம், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை அடுத்து அன்னதானம் நடைபெறும். மாலை 4 மணிக்கு பஜனை, 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 7 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 8 மணிக்கு பரிசு வழங்குதல் நடைபெறும்.

    3-ம் நாள் திருவிழாவான (10-ம் தேதி) காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, பஜனை, வில்லிசை, மதியம் 12 மணிக்கு உச்ச பூஜை, சிறப்பு தீபாராதனை அடுத்து அன்னதானம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வெள்ளி விளாகம் மறைந்த அப்பாவு நாடார் கொச்சிப்பிள்ளை நினைவாக வழங்கும் மாபெரும் வில்லிசை நடைபெறும். மாலை 3 மணிக்கு கூட்டு பொங்கல் வழிபாடு, 4 மணிக்கு பூப்படை, 5 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறும்.

    கோவில் திருவிழா ஏற்பாடுகளைகோவில் திருவிழா ஏற்பாடுகளை அரசமூடு அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை ஆலய நிர்வாக குழுவின் தலைவர் பேபி ராஜேந்திரன், செயலாளர் வின்சிலி, நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து செய்து வருகின்றனர்.

    ×