search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா துப்பாக்கிச்சூடு"

    அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் மர்ம நபர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர், ஒரு அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். #SouthCarolinashooting
    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து, சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவது அந்நாட்டில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள புளோரன்ஸ் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு வழக்கு விசாரணை தொடர்பாக வாரண்ட் வழங்க போலிசார் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் இருந்தவாறு மர்ம நபர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சுடு நடத்தினார்.

    இதில் குண்டு துளைத்து 3 போலீசார் முதலில் தரையில் வீழ்ந்தனர். பின்னர் அந்த மர்ம நபர், குழந்தைகள் சிலரை பினைக் கைதிகளாக வீட்டிற்குள் பிடித்து வைத்து வைத்துக்கொணடார். குழந்தைகளை மீட்க முயற்சித்த போலீசாரை நோக்கி மீண்டும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில் மேலும், 4 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டின் இறுதியில் மர்ம நபரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். எனினும் அந்த நபரை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை மற்றும் எதற்காக போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் ? என்ற விவரங்களையும் போலீசார் தரப்பில் வெளியிடவில்லை.

    இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 7 போலீசார் அதிகாரிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழ்ந்தார். மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். #SouthCarolinashooting
    பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் அலுவலக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #PennsylvaniaGunfire
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான பென்சில்வேனியாவில் உள்ள மாசன்டவுன் பகுதில் டேவிட் சிம்சக் எனும் மாவட்ட நீதிபதியின் அலுவலகம் அமைந்துள்ளது.

    எப்போதும் போல அலுவலக வளாகத்தில் அலுவல் வேலையாக நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர். அப்போது நீதிபதியின் அலுவலகத்தின் வெளியே திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

    இதனால் பதட்டமடைந்த மக்கள் அலுவலகத்துக்கு உள்ளே அலறியடித்து ஓட தொடங்கினர். பின்னர் மர்ம நபரும் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததார்.

    இதற்கிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இந்த திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். #PennsylvaniaGunfire
    அமெரிக்காவில் உள்ள ஒக்கிகோ மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #USGunFire
    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்நாட்டில் எளிதில் துப்பாக்கி உரிமம் பெற முடியும் என்பதால், அங்குள்ள பெரும்பாலானவர்களிடம் துப்பாக்கி உள்ளது.

    இதனால், பெற்றோர்களின் துப்பாக்கியை தவறுதலாக சிறுவர்கள் பயன்படுத்துவதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்திரத்தில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தும் கலாச்சாரம் அங்கு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், ஒக்கிகோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து தலைமை போலீஸ் அதிகாரி எலியட் ஐசக் கூறுகையில், ‘வங்கியில் இருந்த வாடிக்கையாளர்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தற்காப்புக்காக அவரை நோக்கி சுட்டத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே குண்டு அடிபட்டு உயிரிழந்தார்.

    இதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என அவர் தெரிவித்தார். #USGunFire
    ×