search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க ஏவுகணை"

    சோதனையின் போது பறக்கும் போதே வழிமாறி சென்ற அமெரிக்க ஏவுகணையை விமானப்படை அதிகாரிகள் நடுவானத்திலேயே அழித்தனர். #USmissile #AirForceofficers

    நியூயார்க்:

    அமெரிக்க விமானப்படை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் படைத்த ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று (மினிட்மேன் 3’ என்ற ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்காவின் வேண்டர் போர்க் போர் விமான தளத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

    தொடக்கத்தில் சரியான பாதையில் பறந்த ஏவுகணை திடீரென வழி மாறியது. விமானப்படை நிர்ணயித்து இருந்த புள்ளியை நோக்கி செல்லாமல் விலகி சென்றது.

    இதனால் விமானப்படை அதிகாரிகளும், வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே விமானப்படை அதிகாரிகள் துரிதமாக வேலையில் இறங்கினர்.

    வானத்தில் செல்லும் போதே தானாக வெடிக்க வைக்கும் வசதியை வைத்து ஏவுகணையை வெடிக்க செய்தனர். இதை அவ்வாறு வெடிக்க செய்திருக்காவிடில் அது வேறு எங்காவது விழுந்து வெடித்து இருக்கக் கூடும். இதன் மூலம் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #USmissile #AirForceofficers

    ×