search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகளுக்கு உத்தரவு"

    • ஆனையூர்-கூடல்நகர் பகுதிகளில் மழையால் சேதமான சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் வீதிகள் சேதம் அடைந்துள்ளன.

    மதுரை

    மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் வீதிகள் சேதம் அடைந்துள்ளன.

    பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் சாலைகள், வீதிகள் உள்ளதால் அதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், குடியிருப்போர் சங்கத்தின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்திற்கும், மதுரை மாநகராட்சிக்கும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர், கூடல் நகர் பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகளுடன் சென்று மழையால் சேதம் அடைந்த சாலைகள் மற்றும் வீதிகளை ஆய்வு செய்தார்.

    அவருடன் கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மேயர் இந்திராணி, மண்டல தலைவர் வாசுகி மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    சேறும் சகதியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் செல்ல முடியாத அளவில் இருந்த பல்வேறு பகுதிகளை அமைச்சர் மூர்த்தி நடந்து சென்று பார்வையிட்டார்.

    அப்போது பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சேதம டைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்கும்படி அதிகாரிக ளுக்கும் உத்தரவிட்டார்.

    மேலும் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்த பகுதி களை கண்டறிந்து மழை நீரை உடனடியாக அகற்று வதற்கு தேவையான நடவடிக்கை களை எடுக்கவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    ஆனையூர், கூடல் நகர், தபால் தந்தி நகர் உள்ளிட்ட பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளையும் விரைந்து செய்யவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தினார்.

    அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தபோது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

    ×