search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணைகள் திறப்பு"

    கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 11 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவானது. தற்போது அதன் பாதிப்பில் இருந்து கேரளா மீண்டு வருகிறது.

    இந்த நிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கன மழை பெய்து வருகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு முதல் மாலத்தீவு வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கிறது.

    இந்த மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். தொடர்ந்து 36 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில் மழை அதிக அளவு பெய்து வருவதால் அந்த 2 மாவட்டங்களுக்கும் வருகிற 7-ந்தேதி வரை ரெட் அலர்ட் எனப்படும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், வயநாடு, கொல் லம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பச்சை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கேரளாவில் உள்ள அணைகளில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 11 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாறு, அருவிக்கரை, தேபாறை, பொன்முடி, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா, சிமினி, சோலையார், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மங்கலம், போத்துண்டி, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மாடுவெட்டி உள்பட 11 அணைகள் திறக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே போல சபரிமலை பம்பை ஆற்றிலும் மழை காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த பேரிடரின் போது பம்பை ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக திரிவேணி சங்கமம் பகுதியில் உள்ள 3 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டது. தேவசம் போர்டுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் இடிந்தன.

    இதைத் தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலமும் சேதம் அடைந்துள்ளது.

    இடுக்கி, மூணாறு போன்ற பகுதிகள் சுற்றுலா தலமாகும். இங்கு ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது மழை காரணமாக இந்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை பலகைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட தொடங்கி உள்ளன.

    அனைத்து அரசு துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.  #KeralaRain
    கார் பருவ சாகுபடிக்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடியை மேற்கொள்வதற்காக அணைகளில் தண்ணீரை திறந்துவிட வேண்டும் விவசாயிகளின் வேண்டுகோள் விடுத்தனர்.



    இதனை ஏற்று கார் பருவ சாகுபடிக்காக, கடனாநதி, அடவிநயினார், ராமநதி, கருப்பாநதி மற்றும் கொடுமுடியாறு அணைகளில் இருந்து 22-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
    ×