search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிகுழாய்"

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.28 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது.
    • பல்வேறு ஊர்களில் அடிகுழாயை மறைத்தும், மோட்டார் சைக்கிளுடன் சேர்த்தும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பழனி:

    பழனி நகராட்சி 7-வது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பழைய தாராபுரம் சாலையில் இருந்து பெரியநாயகி அம்மன் கோவில் வரை கீழ வடம்போக்கி தெரு உள்ளது. இந்த பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிகுழாய் அமைக்கப்பட்டது. தற்போது வரை அந்த குழாயில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.28 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது. அடி குழாயில் பாதி பகுதியை மூழ்கடித்து சாலை அமைக்கப்பட்டது. இதனால் தற்போது குடம் வைத்து இந்த குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. டப்பாவை வைத்து பிடித்து குடத்தில் ஊற்றி பிறகு தண்ணீர் எடுத்து செல்லும் நிலை உள்ளது.

    சாலை மேல் சாலை அமைக்க கூடாது என்று அரசு உத்தரவு உள்ளது. இதனை காற்றில் பறக்க விட்டு இப்பகுதியில் சாலை அமைத்துள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே இந்த பணியை மேற்கொண்ட அரசு காண்டிராக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஏற்கனவே பல்வேறு ஊர்களில் அடிகுழாயை மறைத்தும், மோட்டார் சைக்கிளுடன் சேர்த்தும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அந்த காண்டிராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல இப்பகுதியிலும் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு முறையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×